Thursday, August 30, 2012

தைமூர்


 

 
தைமூர் இதற்க்கு வேறு ஒரு வழி கண்டுபிடித்தான்.சில நூறு அடிமைகளை நட்ட நடுவில் கொண்டு வர செய்தான்.மறுகணம் அவன் ஆணையிட தைமூரின் வீரர்கள் உருவிய வாட்கள் அந்த அடிமைகளின் உடல்களை துண்ட துண்டாக மாற்றியது.
அவர்கள் மற்ற அடிமைகளை பார்த்து வேற யாரேனும் வாலாட்டினால் அவர்களுக்கும் இதே நிலைமைதான் என எச்சரித்தனர்.இந்த பயங்கர நிலைமையை பார்த்த பல்லாயிரக்கணக்கான அடிமைகள் கதி கலங்கி போனார்கள்.இருந்தாலும் விதி அந்த அடிமைகளை விட்டு வைக்கவில்லை டெல்லி சுல்தானின் போர் ஏற்பாடுகளை பற்றித் துப்பறிய தன தளபதிகளுடன் கிளம்பி சென்றான் தைமூர்.இதை எப்படியோ தெரிந்து கொண்ட மல்லுகான் திடீரென்று ஒரு படையுடன் கோட்டையிலிருந்து வெளிப்பட்டு,சில வீரர்களோடு மட்டும் இருந்த தைமூரை துரத்தியடித்தான்.
    முகம் சிவந்து கோபம் கொந்தளிக்க பாசறைக்குத் தைமூர் திரும்பிய போது பேரணியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அடிமைகளில் சிலர் தங்கள் பரிதாப சூழ்நிலைகளையும் மறந்து களுக்கென்று சிரித்து விட அவர்கள் பக்கம் பார்த்த தைமூர் நிதானமாக அவர்களில் யாரும் உயிருடன் இருக்க கூடாது என கட்டளையிட்டான்.அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரின் தலைகளும் மண்ணில் வெட்டி வீழ்த்தப்பட்டன.இந்த ஒட்டு மொத கொலைகளுக்கும் பின்னர் தைமூரின் முகம் சோகமயமாகவே இருந்தது.ஏனென்றால் இந்தியாவுக்கே உரித்தான யானைப்படைக் கண்டுதான்.
       எளிமையான அரசர்களிடம் கூட நிறைய யானை படை உண்டு .அந்த யானைகள் ஆவேசத்துடனும் கட்டுகொப்புடனும் பங்கேற்பது அதற்கான பயமாக இருந்தது.இந்தியாவுக்குள் நுழைய நினைக்கும் மங்கோலிய,கிரேக்க,மற்றும் ஆப்கான் தளபதிகள் பலர் அவர்களை நோக்கி ஆயிரக்கணக்கான யானைகள் ஓடி வருவதைக் கண்டு கற்பனை செய்து கொண்டே  பத்தியில் சென்ற நிகழ்வும் உண்டு.அனால் தைமூரோ அதைப் பற்றி கவலை படவில்லை.டெல்லி சுல்தானின் யானைப் படையை எதிர் நோக்க தயார் ஆனான்.டிசம்பர் 17 ஆம் தேதி சுல்தான் முகமது ஷா வின் கோட்டைகள் திறந்ததன.உயர்த்திப் பிடித்த வாட்களும் கேடயம்களும் பளீரிட பத்தாயிரம் குதிரை படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.அதை தொடர்ந்து நாற்பதாயிரம் வீரர்கள் கொண்ட காலாட்படை.பிறகு தரை அதிர வந்தது யானைப்படை.நெற்றிப்பகுதியில் இரும்பு முட்கள் பதிக்கப்பட்ட கவசங்களுடன் தந்தங்களில் பொருத்தப்பட்ட நீண்ட வாட்கள்.போர் ஆரம்பித்தது.தைமூர் படையை நோக்கி முனேறிய யானை படைகள் தைமூரின் குதிரை படை வீரர்களால் கலீல் வெட்டபட்டன.அதையும் மீறிய யானை படை அவர்கள் வெட்டி வைத்த பள்ளங்களில் விழுந்து நிலை தடுமாறின.உசாரான தைமூரின் படை வீரர்கள் ஷா வின் படை வீரர்களை வெறிகொண்டு தாக்கினர்.உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த ஆணையிட்டான் தைமூர்.இருபுறமும் பக்கவாட்டிலிருந்து தைமூர் படையினால் அணிவக்குக்க பட்டிருந்த ஒட்டகங்களும் எருமைகளும் ஏக காலத்தில் ஷா வின் படையை நோக்கி விரட்டப்பட்டன.அவற்றின் முதுகளில் பெரிதாக வைக்கோல் மூட்டை! அவற்றோடு பாய்ந்து வந்த மங்கோலிய படை வீரர்கள் திடீரென்று கிளம்பிய நெருப்பு வியூகம் யானை படை மற்றும் சாவின் படையை துவம்சம் பண்ணியது.தைமூரின் படை வீரர்களும் புகுந்து விளையாடினர்.ஒரே நாளில் மாலை நேரம் வருவதற்குள் போர் முடிந்தது.தைமூரின் தலைமையில் அவனது படைகள் வெற்றிக் களிப்புடன் நடுங்கி கொண்டிருக்கும் டெல்லியில் காலடி எடுத்து வைத்தனர்.

தைமூரின் வெறியாட்டம் தொடரும் .அடுத்த பதிப்பில் சந்திப்போம். 


                                       இளவரசன்

No comments:

add

ணைக்க ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும். floating-sharing-voting-widget-for-tamil-blogs-2 இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. Floating Sharing vote buttons widget for Tamil Blogs: 1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.

Widget