Tuesday, May 22, 2012

நாடு விடுதலை பெரும் முன்
தனுஷ்கோடி, இலங்கை இடையே பயணித்த கப்பல்கள்  இந்தியா விடுதலைக்கு முன் வெள்ளைகாரர்கள் ஆண்ட காலத்தில் அண்டை நாடுகளான இலங்கை,பாகிஸ்தான்,பர்மா போன்ற வெள்ளைகாரர்களின் நிர்வாக ஆட்சி  பொறுப்பின் கீழ் இருந்தது.இலங்கை வளங்களையும் செல்வ வளங்களையும் அபகரித்து செல்ல வெள்ளையர்கள் வழி தெரியாமல் திண்டாடினர்.


இதற்கு காரணம் அப்போது இலங்கையில் உழைப்பாளர்களும், மனிதவளமும் இல்லாமல் இருந்தது.இதன் காரணமாக இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை திறன்மிக்க உழைப்பாளிகளை இலங்கைக்கு கொண்டு சென்று ரப்பர்,தேயிலை தோட்டங்களில் குடியமர்த்தி அவர்களின் உழைப்பை சுரண்டி தங்களது  நாட்டை குபேரபுரியாக்க திட்டமிட்டனர்.அதற்காக கங்காணிகள் எனப்படும் ஏஜெண்டுகளை அவர்கள் நியமித்தனர்.தற்போது உள்ளது போல் முன்பு விமான போக்குவரத்து இல்லை.இதற்காக இலங்கையின் இயற்கை வளங்களை அபகரிக்க வெள்ளைகாரர்கள் பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்தனர்.இலங்கைக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி பாக்ஜலசந்தி எனப்படும்.இது ஆழமற்ற அதே நேரத்தில் கப்பல் போக்குவரத்திற்கு தகுதியான பகுதி என்பதை ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தனுஷ்கோடிக்கும் ,இலங்கை தலைமன்னருகும் இடையே கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிட்டனர்
                                                      
இதற்காக ஆழமற்ற அந்த கடல் பகுதியில் செல்ல ஏதுவான பயணிகள் கப்பலை வடிவமைத்தனர்.இந்த சூழ்நிலையில் 1910ஆம் ஆண்டு சென்னை ,தனுஷ்கோடி இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.இதற்காக தனுஷ்கோடியில் பெரிய ரெயில் நிலையம் அமைக்கபட்டது.சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் இலங்கை செல்லும் கூலி தொழிலாளர்கள் இந்த ரெயிலில் செல்வது தான் வழக்கம்.தனுஷ்கோடியில் வந்திறங்கும் பயணிகள் துறைமுகத்தில் நிறுத்தபட்டிருக்கும் கப்பலில் ஏறி இலங்கை தலைமன்னாருக்கு சென்றுவிடலாம்.இதன் காரணமாகவே சென்னை தனுஷ்கோடி ரெயில் போட்மெயில் என்று ஒரு நூற்றாண்டு காலமாகவே அழைக்கப்பட்டது வந்ததது.இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தென்மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளர்கள் பிழைப்பு தேடி இலங்கை சென்றனர்.இவர்கள் இலங்கை மலையக தமிழர்கள் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அங்கு குடியேறிய மக்கள் குடியுரிமை பெற்றனர்.தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் செல்லும் பயணிகள் அங்கு ரெயில் நிலையத்தில் இருக்கும் ரெயிலில் ஏறி இலங்கையில் எந்த பகுதியில் செல்லலாம்.இதற்காக தமிழகத்திலிருந்து எந்த பகுதியில் இருந்து இருந்து சென்றாலும் கப்பல் மற்றும் ரெயிலுக்கு ஒரே டிக்கெட் வாங்கும் வசதி இருந்தது.இதற்கான கட்டணம் ரூபாய் 80 மட்டுமே.இந்திய விடுதலை அடைந்த பின் இலங்கை தனி நாடானது.இங்கிருந்து இலங்கை செல்ல விசா,பாஸ்போர்ட் தேவைப்பட்டது.பிரிட்டிஷ்காரர்களால் நடத்தப்பட்டு வந்த கப்பல் போக்குவரத்து ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது. 
 இந்தஆழமற்ற பகுதியில் வெள்ளைக்காரர்களால் வடிவமைக்கப்பட்ட டீ.எஸ்.எஸ்.போசன் டீ.எஸ்.எஸ்.இர்வின்  ஆகிய 2 கப்பல்கள் தொடர்ந்து பயணிகளை ஏற்றி சென்று வந்தன. பிரிட்டிஷ் கவர்னர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இந்த கப்பல்கள் நாடு விடுதலை அடைந்த பின்பு இந்திய கணித மேதை எஸ்.எஸ்.ராமானுஜம் என்று பெயர் மாற்றப்பட்டு தனது பயணத்தை தொடர்ந்தது.ஒரு நூற்றாண்டு காலமாக இயங்கி வந்த கப்பல் கடந்த 1964 ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி வீசிய புயல் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது.இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகினர்.இதன் பின்பு இந்திய இலங்கை கப்பல் போக்குவரத்தை இந்திய கப்பல் கழகம் ராமேஸ்வரத்தில் இருந்து நடத்தியது.இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 800 முதல் ஆயிரம் பயணிகள் வரை பயணம் செய்து வந்தனர்.2 நாட்களுக்கு ஒரு முறை நடைபெற்று வந்த இந்த கப்பல் போக்குவரத்து பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக தினசரி நடைபெற்றது.ஆனால்  1983 ஆண்டுக்குபின் இலங்கையில் ஏற்பட்ட இன கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பின்மை ஆபத்து காரணமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தனுஷ்கோடி புயலுக்கு பின் சென்னை தனுஷ்கோடி போட்மெயில் சென்னை ராமேஸ்வரம் இடையே சேது எக்ஸ்பிரஸ் ரெயிலாக தனது பயணத்தை இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.


 
No comments:

add

ணைக்க ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும். floating-sharing-voting-widget-for-tamil-blogs-2 இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. Floating Sharing vote buttons widget for Tamil Blogs: 1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.

Widget