Monday, May 21, 2012

தனுஷ்கோடியின் வரலாறு


    
 
      

  


                       1964 புயலுக்கு  முன் தனுஷ் கோடி பயணிகள் கப்பல் போக்குவரத்து உடைய ஒரு தளமாக விளங்கியது.இந்த கப்பல் போக்குவரத்து இலங்கை தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே இயங்கி வந்தது. இங்கு இர்வின் ,கோசன் என்ற இரண்டு கப்பல்கள் கடல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன.இங்கு சுங்க இலாகா அலுவலகம்,தபால் தந்தி நிலையம்,இரயில் நிலையம்,லோகோசெட் (ரயில் இஞ்சினுக்கு நிலக்கரி நிரப்பும் இடம் )ஒரு கிறிஸ்தவ ஆலயம்,மேலும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். இது  ஒரு மீனவ கிராமம்.அங்குள்ள மக்கள் மீன்பிடித் தொழிலையே பிரதானமாக செய்து வந்தனர்.அது போக சிறு சிறு வணிகர்கள் வாழ்ந்து வந்தனர்.

தனுஷ்கோடி இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.தனுஷ்கோடி என்ற பெயர் யாருக்கும் கிடைக்காத சிறப்பு ராமநாதசேதுபதிக்கு கிடைத்தது ஒரு சிறப்பம்சமாகும்.1964ஆம் ஆண்டு 22,23 இல் 120கிலோமீட்டர் வேகத்தில் அடித்த சூறாவளி காற்றால் மற்றும் கடல் சீற்றத்தால் தனுஸ்கோடி முற்றுமாக அழிந்து விட்டது.அன்று 22.12.1964 இரவு 9 மணியளவில் மதுரை தனுஷ்கோடி பாசஞ்சர் வந்து கொண்டிருந்தது.அப்போது அடித்த சூறாவளி காற்றினாலும்,கடல் சீற்றத்தாலும் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சேரும் இடம் செல்லாமலே பரிதாபமாக உயிரிழந்தனர்.அந்த ரயில் பாகங்கள் எதுவுமே நமக்கு கிடைக்க பெறவில்லை.அனைத்தும் அந்த கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்டு  மறைந்து போயின.அங்கு கிடைத்த பொருள் 
அந்த ரயில் பாகங்களில் உள்ள இரும்பு சக்கரமும் அதனுடன் இணைக்கப்பட்ட இரும்பிலான பொருள்கள் மட்டுமே.மரபலகையினால் செய்யபட்ட பொருள்கள் அனைத்தும் கடலில் அடித்து செல்லப்பட்டன.

புயலுக்கு பின்


1964 டிசம்பர் 23 புயலுக்கு பின் அங்கு மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பு தகுதி இல்லாத இடமாக அரசு அறிவித்தது.அங்கு தற்போது மீனவர்கள் தற்காலிகமாக குடிசைகள் போட்டு மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.இங்கு வாழும் மக்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உள்ளது.இன்றளவிலும் ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 13கிலோமீட்டர் தொலைவில் உள்ள முகுந்தராயர் சத்திரம் வரையில் தன சாலை பூகுவறது உள்ளது.அங்கிருந்து துனுஷ்கோடிக்கு 5லிலோமேட்டர் மக்கள் நடை பயணமாகவும்,ஜீப்,மணலில் செல்லும் கனரக வாகனங்களிலும் தன சென்று வருகின்றனர்.அந்த போக்குவரத்தும் கலை 6 மணி முதல் மாலை 5மணி வரை தான் உள்ளது.தனுஷ்கோடியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் ,அன்றாட வாழ்கைக்கு தேவைப்படும் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்ற வணிக தாகமோ இல்லை.இதனால் அவர்கள் சுமார் 5கிலோமீட்டர் நடந்தும் 13கிலோமீட்டர் தொலைவில் பேருந்து பயணம் செய்தும் ராமேஸ்வரம் வந்து பொருள்கள் வாங்கி செல்லும் ஆவள நிலை உள்ளது.இன்னும் உருக்கமான நிகழ்வுகளுன் அடுத்த பதிப்பில் தொடர்கிறேன்.                                                                             
 


 


 
                                                                                                                                                                                                                           இப்படிக்கு
                                                                                                                                                                                                                                     உங்கள் தோழன்
                                                                                      
 
 
                                                                                                     இ.இளவரசன்
            

No comments:

add

ணைக்க ப்ளாக் பதிவுகள் அதிக வாசகர்களுக்குச் சென்றடைய முக்கியமாக உதவுபவை சமூக வலைத்தளங்களின் (Facebook, Google+, Twitter) ஓட்டுப்பட்டைகளும் மற்றும் திரட்டிகளின் (Indli, Tamil10) ஓட்டுப்பட்டைகளும் ஆகும். வாசகர்கள் இவற்றைக் கிளிக் செய்து ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் பகிரும் போது அவர்களின் மூலம் புதிய வாசகர்கள் நமது ப்ளாக்கிற்கு வருவார்கள். வழக்கமாக ஓட்டுப்பட்டைகள் நேர்க்கோட்டு வரிசையில் (Horizontal) வைத்திருப்பார்கள். இப்போது நாம் பார்க்கப் போவது ப்ளாக்கின் இடது ஓரத்தில் வைப்பதற்கான செங்குத்தான ஓட்டுப்பட்டை (Vertical Sharing Bar) ஆகும். floating-sharing-voting-widget-for-tamil-blogs-2 இந்த ஓட்டுப்பட்டையில் Facebook Like, Twitter, Google Plus +1, இண்ட்லி திரட்டி, தமிழ்10 திரட்டி போன்றவற்றின் பட்டன்களை சேர்த்திருக்கிறேன். தமிழ்மணம் பட்டை நீளமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை. Floating Sharing vote buttons widget for Tamil Blogs: 1. Blogger Dashboard க்குச் சென்று உங்களின் ப்ளாக்கின் மீது கிளிக் செய்து பின்னர் இடதுபுறத்தில் "Layout" மெனுவைக் கிளிக் செய்யவும். 2. உங்களின் ப்ளாக்கின் லேஅவுட் தோன்றும். அங்கே “Add a Gadget" என்பதில் கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் கொஞ்சம் கீழே சென்றால் HTML/JavaScript என்ற வசதி இருக்கும். அதில் கிளிக் செய்து கீழ்வரும் நிரல்வரிகளைக் காப்பி செய்து சேமியுங்கள்.

Widget