Thursday, May 24, 2012

ராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்














 













                                 சுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 10 நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது.சோழர் காலத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இருந்ததுக்கு சான்றாக முதலாம் பராந்தகன் காலத்தில் வெளியிடப்பட்ட வேளஞ்சேரியில் கிடைத்த செப்பு பட்டையில் குறிப்புகள் காணப்படுகின்றன.

                        
                            முதலாம் பராந்தகன் ராமேஸ்வரம் , கன்னியாகுமரி , ஸ்ரீ ரங்கம் ஆகிய துலா பாரம் வழங்கிய நிகழ்ச்சி செப்பு பட்டயத்தில் குறிபிட்டுள்ளது. எனவே பராந்தகன் காலத்தில் ராமநாதசுவாமி கோவில் இருந்துள்ளதற்கு இந்த செப்பு பட்டயத்தில் காணப்படும் குறிப்புகள் சுட்டி காட்டுகிறது . ராமேஸ்வரம் கோவிலில் கி . பி . 10 ம் நூற்றாண்டு முதல் வழிபாட்டு முறைகள் நடந்துள்ளது .


ஆயிரத்து நூறு ஆண்டுகள்

         
                                                   ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஷ்வரம் கோவிலுக்கு சோழர்கள் , பாண்டிய மன்னர்கள் , ராஷ்டிரிய கூடர்கள் , கொய் சாலா மன்னர்கள் , நாயக்கர்கள் , சேதுபதிகள் என பல மன்னர்கள் துலா பாரம் நிகழ்சிக்கு வந்துள்ளனர் . அப்போது கோவிலுக்கு வந்த பல மன்னர்கள் தங்களது எடைக்கு எடையாக தங்கம் மற்றும் ரத்தினங்களால் ஆனா ஆபரணங்களையும் ராமநாதசுவாமிக்கு காணிக்கையாக செலுத்தினர்.இது போன்ற ஆபரணங்களை பாதுகாத்து வைப்பதற்காகவே கோவிலின் கட்டிடக்கலையுடன் இணைந்த குறிப்பிட நபர்கள் மட்டுமே அறியும் வகையில் நிலவரை அமைத்தனர்.இந்த   அறைகள்   ராமேஸ்வரம் கோவிலின் மகா மண்டபம் என்று சொல்லக்கூடிய கர்ப்ப கிரகத்தின்வடமூலையில் அமைந்துள்ளது. 

இந்த அறையை 1நபர்   மட்டுமே   இறங்கும்வகையில் வடிவமைத்துள்ளனர்.மேலும் அந்த அறைகளில் பல பகுதிகளாக பிரித்து தனி தனி அறைகளாக அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.கி.பி.1318ல் டெல்லி தளபதி குராஷ்கான் ராமேஸ்வரம் வந்த பொது சில குறிப்பிட நகைகளை மட்டுமே கோவிலில் வைத்து விட்டு விலை மதிப்பற்ற தங்க,வைர நகைகளை கோவிலின் வட கிழக்கு மூலையில் பூமிக்கடியில் பதல அறைகளில் தன வைத்தராம்.இந்த அறையானது கோவிலின் மகா மண்டபத்தில் இருந்து தொடங்கி ராமேஸ்வரம் பேய் முனை என்று அழைக்கப்பட்டு தற்போது பிசாசு முனை என்று அழைக்கப்படும் கடற்கரை வரையிலும் இருந்தததாம்.


இதை தவிர ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி அம்பாளுக்கு அணிவிக்க விலை உயர்ந்த நவரத்ன கிரிடம்,மூலஸ்தான அம்மனுக்கு செலுத்தும் ரத்னா கிரிடம் இரட்டை வடம் பவள மாலை இரத்தின கை தீவட்டி வைர கிரிடம் தங்கவட சங்கிலி தங்க குடம் தங்ககுடை என பல விலை உயர்ந்த ஆபரணங்களும் உண்டு.இதை தவிர தங்கம் வெள்ளிகளில் செய்யப்பட்ட 23 வாகனங்களும் கோவிலில் உண்டு.இந்த நகைகள் பற்றிய அணைத்து தகவல்களும் 1975ல் வெளியிடப்பட்ட மஹா கும்பாபிசேகம் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்தினி அம்மனுக்கு அணிவிக்க விலை உயர்ந்த பல ஆபரணங்களும் இருந்து தற்போது முக்கிய திருவிழாக்களின் பொது ஒரு சில நகைகள் மட்டுமே அணிவிக்கப்படும்.


எனவே தற்போது ராமேஸ்வரம் கோவிலில் பல மன்னர்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை வைப்பதற்கு பல பாதாள சுரங்கம் அமைத்திருக்கலாம் என தெரிகிறது.அதில் பல பாதாள அறைகள் மூடப்பட்டதாகவும் தெரிகிறது.



No comments:

add

Widget