Sunday, May 20, 2012

சந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சுற்றில் தமிழ்நாடு அணி 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது.












ஒடிசாவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் பிரிவு   டி  பிரிவில் நடைபெற்ற காலிறுதி லீக் சுற்று ஆட்டம் ஒன்றில், டெல்லி அணியுடன், தமிழ்நாடு அணி மோதியது.
இதில், முதல் பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் தமிழ்நாடு வீரர் கார்த்திக் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். பின்னர், டெல்லி அணி வீரர்கள் கோல் அடிக்காததை தொடர்ந்து, தமிழ்நாடு அணி 1-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரிவு   டி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில்,  ரயில்வேஅணி 4-க்கு 2 என்ற கோல் கணக்கில்  மிசோரம் அணியை வென்றது. பிரிவு  சி பிரிவில் நடைபெற்ற காலிறுதி லீக் சுற்று ஆட்டங்களில் செர்விசெஸ் அணியும், ஒடிசா அணியும் வெற்றி பெற்றன. இரண்டு அணிகளும் 4-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கிலேயே வெற்றி பெற்றன. ஒடிசா அணி வீரர் கோகுல் ஓரம்  ஹாட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். கடந்த 11-ம் தேதி தொடங்கிய, 66-வது சந்தோஷ் டிராஃபி கால்பந்துப் போட்டியில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 25 அணிகள் பங்கேற்றுள்ளன.

No comments:

add

Widget