Wednesday, December 17, 2014

தைமூர்

அனைவரும் மன்னிக்கவும் ஒரு சில காரணங்களால் என்னால் சரிவர பதிவிட முடியவில்லை.அந்த ஆண்டவனின் கிருபையால் மீண்டும் உங்கள் இளவரசன்

தைமூர் பிறகு குதுப்மினார் கட்டிய குத்புதினுக்கு பின் ஆட்சிக்கு வந்த சுல்தான் சம்சுதீன் இல்தூத்மிஷ் மற்றும் அலாவுதீன் கில்ஜியின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு டெல்லி நகர் திரும்பினான் தைமூர்.விருந்தும் மற்ற கேளிக்கைகளும் தயாராக இருந்தன. ஒய்ன் கோப்பைகள் உருண்டன. ஒரு கோப்பை ஒயினை உள்ளே தள்ளிய தைமூர் ஆர்வத்துடன் கேட்ட கேள்வி?
"யானைகள் எங்கே "

 தளபதிகள் சொல்லியனுப்ப ,தைமூர் படை கைப்பற்றியிருந்த 120 யானைகள் வரிசையாக வந்து மண்டியிட்டு தும்பிக்கையை உயர்த்தி தைமூருக்கு சலாம் போட்டன.குஷியான தைமூர் இந்த மிருகங்களை பத்திரமாக சங்கிலியால் கட்டிப்போடுங்கள் என ஆணையிட்டான்.இவை அனைத்தும் என்னுடம் ஊருக்கு வரப்போகின்றன. பின்னர் காண்டமிருகங்களை அழைக்க அவை யானைகள் போல் அல்லாமல்  "தேமே  தேமே"   என வந்தன. அதன் மேல் நாட்டம் செலுத்தவில்லை.
 இதெல்லாம் ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் சிறைப்படுத்த பட்ட பெரிய மனிதர்களின் பெயர் ,பதவிகளை லிஸ்ட் எடுத்து அவர்கள் தத்தம் உயுருக்ககத் தர வேண்டிய பணயத் தொகையையும் தைமூரின் நிதி அமைச்சர்கள் புத்தகங்களில் குறித்தார்கள். பிறகு தான் மறுபடியும் பயங்கரம் தொடரும்..!

Sunday, September 02, 2012

தைமூர்

                         தைமூரின் ரத்தமயமான அணுகுமுறை பற்றி படிக்கும் பொது நமக்கே கொலை நடுங்குகிறதே உண்மையில் அவர்களின் நிலை என்ன ? எவ்வளவு வெறிபிடித்தவன் தைமூர் என தோன்றும் நிலை உள்ளது.

Thursday, August 30, 2012

தைமூர்


 

 
தைமூர் இதற்க்கு வேறு ஒரு வழி கண்டுபிடித்தான்.சில நூறு அடிமைகளை நட்ட நடுவில் கொண்டு வர செய்தான்.மறுகணம் அவன் ஆணையிட தைமூரின் வீரர்கள் உருவிய வாட்கள் அந்த அடிமைகளின் உடல்களை துண்ட துண்டாக மாற்றியது.

Wednesday, August 29, 2012

தாஜ்மஹால்

    

 

 

 

 

 

           காதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால்.இதனை கட்டும் பணி 1631 -ல் தொடங்கப்பட்டது.

தைமூர்

                      தைமூர் 

     ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டுமென்ரால் விண்ணை முட்டும் இமயமலை தொடரை தாண்டி தான் வரவேண்டும்.இல்லையென்றால் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் சிந்து நதி கரையை தாண்டி தான் வரவேண்டும்.  

Thursday, May 24, 2012

ராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்


 

                                 சுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் 10 நூற்றாண்டு கால பழமை வாய்ந்தது.சோழர் காலத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் இருந்ததுக்கு சான்றாக முதலாம் பராந்தகன் காலத்தில் வெளியிடப்பட்ட வேளஞ்சேரியில் கிடைத்த செப்பு பட்டையில் குறிப்புகள் காணப்படுகின்றன.

Tuesday, May 22, 2012

நாடு விடுதலை பெரும் முன்
தனுஷ்கோடி, இலங்கை இடையே பயணித்த கப்பல்கள்  இந்தியா விடுதலைக்கு முன் வெள்ளைகாரர்கள் ஆண்ட காலத்தில் அண்டை நாடுகளான இலங்கை,பாகிஸ்தான்,பர்மா போன்ற வெள்ளைகாரர்களின் நிர்வாக ஆட்சி  பொறுப்பின் கீழ் இருந்தது.இலங்கை வளங்களையும் செல்வ வளங்களையும் அபகரித்து செல்ல வெள்ளையர்கள் வழி தெரியாமல் திண்டாடினர்.

add

Widget